வவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளரினால், வவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் பணியாற்றும் ஊழியரும், தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளருமான கோல்டன் என்பவருக்கு எதிராகவே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரப்பகுதியில் இடம்பெற்று வந்த தொடர்ச்சியான முறைகேடான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி எதிர்த்ததன் காரணமாகவே தன்மீது இக்கொலை அச்சுறுத்தலை தொலைபேசியூடாக விடுத்துள்ளதாகவும், இதற்கான உரையாடல் ஆதாரமும் தன்வசம் உள்ளதாகவும் நகரசபை சுகாதாரத் தொழிலாளியான முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

.