இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளருக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பு

Report Print Sumi in சமூகம்

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் Mr. Damiano Sguaitamatti மற்றும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு வட மாகண ஆளுநரின் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Damiano Sguaitamatti மரியாதை நிமித்தம் ஆளுநரை சந்தித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின் வடமாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.