நான்காயிரம் தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தாரா பயங்கரவாதி சஹ்ரானின் கூட்டாளி?

Report Print Vethu Vethu in சமூகம்

பயங்கரவாத அமைப்பாக தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் நான்காயிரத்திற்கும் அதிகமான தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியரின் செயற்பாடு குறித்து ஆராய விசேட பொலிஸ் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பினை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியரின் செயற்பாடு உண்மையாயின் அதி மிகவும் பாராதூரமான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

முஸ்லிம் வைத்தியர்களிடம் மருத்துவம் பெற்றுக் கொள்வதை ஏனைய மத மக்கள் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப கட்டுப்பாடு மோசடி தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளிடம் விசாரணை செய்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.