சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த நபர் கைது - இராணுவத்திலும் கடமையாற்றியுள்ளார்

Report Print Steephen Steephen in சமூகம்

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் சஹ்ரான் ஹசிமிமுடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான இந்த நபரை பாணந்துறை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் இதற்கு முன்னர் இராணுவத்தில் கடமையாற்றியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த இந்த சந்தேக நபரிடம் இருந்து சில சிம் அட்டைகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவத்தினர், சந்தேக நபரை பாணந்துறை தெற்கு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.