பதினாறு வயது மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மஸ்கெலியா - ஸ்டொக்கம் தோட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தில் ஸ்டொக்கம் தோட்டத்தினை சேர்ந்த ராமச்சந்திரன் ஆனந்தஜோதி என்ற 16 வயது சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை மேற்படி பாடசாலை மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சடலம் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் அவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டிலேயே தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.