100 நாட்கள் போராட்டம் மேற்கொண்டவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் தொடர்ச்சியாக 100 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்ட சுகாதாரத் தொண்டர்கள் 154 பேருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அரசியல் தலைமைகளைச் சந்தித்து அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலதரப்பட்டவர்களின் சந்திப்புக்கள் இடம்பெற்று தற்போது நேற்று முதல் நேர்முகத் தேர்விற்கு 154 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் தொண்டர்கள் சுகாதார சேவைகள் ஊழியர்களாக இணைத்து கொள்ளப்படுவதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 27ம் திகதி திங்கட்கிழமை வவுனியா மாவட்ட சுகாதாரப்பணிமனையில் இடம்பெறவுள்ளது.