வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸார் விஷேட அறிவிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வவுனியா பொலிஸார் இன்று விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

அவசர காலச்சட்டத்திற்கு அமைவாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வர்த்தக நிலையங்களுக்கு விண்ணப்பப் படிவம் ஒன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் உரிமையாளர்கள், ஊழியர்களின் விபரப் படிவத்தினை பூரணப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 4மணிக்குள் வர்த்தகர் சங்கத்தின் அலுவலகத்தில் அதனைக் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி. எச். ஸ்ரீ. சம்பத் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.