பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Mubarak in சமூகம்

நிலாவெளி பகுதியில் வீடொன்றினுள் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை இம்மாதம் 31 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நிலாவெளி பகுதியில் உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் நிலாவெளி பகுதியிலுள்ள வீடொன்றினுள் இரவு வேளையில் புகுந்து இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா மெறுமதியான நகைகளை திருடியுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தலை மறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.