ஆறு துறைகளுக்கான நியமனங்கள் வழங்கி வைத்த கிழக்கு ஆளுநர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்திபெற்ற ஆறு துறைகளுக்கான நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சு செயலகத்திற்குற்பட்ட திணைக்களங்களுக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முக தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 19பேருக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் அசங்க அபயவர்தன கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதன்போது ஆயுள்வேத திணைக்களத்திற்குற்பட்ட இயந்திர இயக்குனர், சமையலாளர், உணவுக்கட்டுப்பாட்டாளர் பதினான்கு பேருக்கும் மாகாண கிராமிய தொழிற்துறைக்குற்பட்ட சுற்றுலா விடுதி காப்பாளர், தச்சுத் தொழில் போதனாசிரியர், திணைக்களத் தொழிலாளி ஐந்து பேருக்கும் இந்நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.