வடக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலை கூரையை கழற்றிச் சென்ற இராணுவத்தினர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி கரைச்சி வடக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அரிசியாலைக் கூரை இராணுவத்தினரால் கழற்றிச் செல்லப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் அருகில் உள்ள கரைச்சி வடக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான அரிசியாலையின் கூரை இன்று இராணுவத்தினரால் கழற்றிச் செல்லப்பட்டுள்ளது.

மேற்படி அரிசி ஆலை கடந்த யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் அதன் கூரைகள் மட்டும் எஞ்சியிருந்தன.

இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி கிளிநொச்சி கரைச்சி வடக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அரிசியாலைக் கூரையினை கழற்ற முற்பட்ட போது ஏற்பட்ட எதிர்ப்பினையடுத்து அதனைகைவிட்டுச் சென்ற இராணுவத்தினர் இன்று படையினரால் அரிசி ஆலையின் கூரை கழற்றிச் செல்லப்பட்டுள்ளது.