கொச்சிக்கடை தற்கொலை தாக்குதல்தாரியின் உடன்பிறப்புகள் தொடர்பில் நீதிபதி விடுத்துள்ள உத்தரவு!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹ்மத் முவாத்தின் சகோதரி மற்றும் இரு சகோதரர்கள் இன்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அலாவுதீன் அஹமட் முவாத்தின் சகோதரர்களான அஹமட் முஸ்கீன் அலாவுதீன், அஹமட் முஸ்னாத் அலாவுதீன் மற்றும் சகோதரியான பாத்திமா சுமையா அலாவுதீன் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மூவரும், தற்கொலை தாக்குதலின் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு, பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய, தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்து மூவரையும், கண்காணிப்பின் நிமித்தம் அடுத்த மாதம் 27ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி லங்கா ஜயரத்ன விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தினம் விசாரணை குறித்த முன்னேற்ற அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மூவரும் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.