கொழும்பு நோக்கி பயணித்த பஸ் திடீரென பற்றி எரிந்தமையால் பரபரப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

அவிசாவளையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு பற்றி எரிந்துள்ளது.

இந்த அனர்த்தம் அவிசாவளை , உக்வத்த பகுதியில் வைத்து இன்று காலையில் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த அனர்த்தம் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளது. தீயை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

பஸ்ஸின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.