தொழிற்சங்கவாதி சிங் பொன்னையா காலமானார்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கங்கவாதிகளில் ஒருவருமான சிங். பொன்னையா காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ நோக்கத்திற்காக இந்தியா சென்றிருந்ததோடு நேற்று இரவு இவர் காலமாகியுள்ளார்.

இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என தொழிலாளர் தேசிய சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இவர் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சரான பழனி திகாம்பரத்தின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.