பொது மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்: மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி

Report Print Sumi in சமூகம்

வலி. வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும், காணி விடுவிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனவும் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ். பலாலியில் இன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் யாரும் எதிர்பாராதவாறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. இதில் பல நூறு உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்பட்டன.

வலி வடக்கில் 25 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருந்த நிலையில் அது தற்போது தள்ளி போடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலும் சரி இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேசத்தின் பாதுகாவலர்களான இராணுவத்தினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது தமது கடமைகளை செவ்வன ஆற்றி வருகின்றனர்.

கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு பொதுமக்களின் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 25 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக இருந்த நிலையில் குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் வருகை இரத்து செய்யப்பட்டதோடு காணி விடுவிப்பு நிகழ்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிலர் போலி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்படும். யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை.

மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக விடுவிப்பதற்கு இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Latest Offers