புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

மத்திய மாகாணம் - தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புகையிரத பாதையில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த பாதசாரதிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் மோதுண்டு இவ் இளைஞன் உயிரிழந்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் தலவாக்கலை, ஒலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய பெனடிக் ரொஷான் என்பவருடையது என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.