வெடிகுண்டுடன் நால்வர் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

பிலியந்தலை பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை ஹெடிகம பிரதேசத்தில் கார் ஒன்றினை நிறுத்தி பரிசோதனையிட்டபோது வெளிநாட்டு தரப்பிலான துப்பாக்கி ஒன்றும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்களிடம் இருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers