வவுனியாவில் வீதியில் சென்ற இளைஞன் கஞ்சாவுடன் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வீதியில் சென்ற இளைஞனிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது நபரொருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பம்பைமடு - புளிதறித்த, புளியங்குளம் பகுதியில் வீதியில் சென்ற இளைஞனிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உடமையிலிருந்து 80கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பூவரசங்குளம் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.