பொகவந்தலாவ பகுதியில் ஏழு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவ - லெச்சமிதோட்டம் மத்திய பிரிவு பகுதியில் ஏழு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்ட பகுதியில் உள்ள உதவி முகாமையாளர் இடம்மாற்றம் பெற்று சுமார் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பங்களாவின் பாதுகாப்பிற்காக தோட்ட நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட காவலாளி சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதேவேளை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்ட சந்தேகநபருக்கு பொலிஸாரினால் பிணை வழங்கபட்டு உள்ளதோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு கட்டளை பிறப்பிக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.