சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தோர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 41 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தேவேந்திரமுனை வெளிச்ச வீட்டில் இருந்து 715 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோலர் படகில் இந்த சந்தேக நபர்கள் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

Latest Offers