இலங்கை தொடர்பில் சீனா எடுத்த தீர்மானம்

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கைக்கு விஜயம் செய்வதை தவிர்க்குமாறு சீனா தனது நாட்டு மக்களுக்கு விதித்திருந்த சுற்றுலா தடையை நீக்கியுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட அதிகாரிகள், இன்று முற்பகல் இலங்கைக்கான சீனத் தூதுவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை நடத்து இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று சீனா அறிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் உட்பட வெளிநாடுகள், தமது நாட்டவர்கள் இலங்கைக்கு செல்ல பயண தடைகளை விதித்திருந்தன.

தாக்குதல் சம்பவங்களை அடுத்து நாட்டில் காணப்பட்ட பாதுகாப்பு நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதால், இந்த தடையை நீக்குமாறு அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.