யாழில் இலவசமாக கண் சத்திர சிகிச்சை

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் இலவச கண் சத்திர சிகிச்சை இன்று நடைபெற்றுள்ளது.

வைத்தியர் சந்திரகுமாரின் ஏற்பாட்டில் எம்.ஐ.ரி நிறுவனத்தினருடன் இணைந்து குறித்த இலவச கண் சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 160 பேருக்கு இலவசமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கு முதல் 7 தடவைகள் இவ்வாறான இலவச சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றதாகவும் வைத்தியர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வடக்கின் கண் சத்திர சிகிச்சை நிபுணர்களும் இன்றைய இலவச கண் சத்திர சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையளித்திருந்தனர்.

Latest Offers