ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட சிலரது சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தினம் 7 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சிலரது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரியவருகிறது.

மூன்று நட்சத்திர ஹோட்டல்கள், விடுதி, மூன்று தேவாலயங்களில் நடந்த தற்கொலை தாக்குதல்களில் 259 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் கொல்லப்பட்டனர் என சந்தேகிக்கப்படும் சிலரது சடலங்கள் தற்போதும் பிரேத அறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சடலங்கள், இலங்கையரின் சடலங்களா அல்லது வெளிநாட்டவர்களின் சடலங்களா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

சம்பவத்தில் கொல்லப்பட்டு அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் சடலங்கள் ஏற்கனவே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers