ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தொடர்புகளை பேணி வந்த மௌலவி கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தொடர்புகளை பேணி வந்த மௌலவியொருவரை தேசிய புலனாய்வு பிரிவினர் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தொடர்புகளை பேணிவந்துள்ளதாகவும், வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தினைக் கொண்டு பள்ளிவாயல்களை கந்தளாய் குச்சவெளி மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் கட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவரை கைது செய்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.