காணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

மஹவிலச்சிய, எலபத்கம பகுதியில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரினதும் சடலங்கள் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும் நேற்று முதல் காணாமல் போயிருந்தனர்.

வீட்டிற்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ள நிலையிலேயே அவர்கள் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் குளிக்கச் சென்ற குளத்துக்கு அருகில் இருந்து எடுத்துச் சென்ற உடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து இருவரினதும் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.