பேருந்துகள் நாவலபிட்டி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பை வெளியிடும் சாரதிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி செல்லும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் நாவலபிட்டி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலபிட்டியில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பேருந்துகள் நாவலபிட்டி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தபட கூடாது என வலியுறுத்தி சாரதிகள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

இதேவேளை நாவலபிட்டியில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேன பகுதியை நோக்கி பயணிக்கும் பேருந்துகள் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.

நாவலபிட்டி, கண்டி மற்றும் கினகத்தேன போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து இடம்பெறாமல் இருந்த போதிலும், பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த ஹட்டனில் இருந்து கண்டி செல்லும் இரண்டு தரப்பு பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டன.

இவ் விடயம் தொடர்பில் பேருந்து சாரதிகள், நேர கண்காணிப்பாளர், நாவலபிட்டி பொலிஸார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி செல்கின்ற அனைத்து பேருந்துகளும் நாவலபிட்டிய பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்த அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.