யாழில் பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Report Print Sumi in சமூகம்
87Shares

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 245 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

டிங்கி படகொன்றில் கேரளக் கஞ்சாவை கடத்திச் சென்ற போதே சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

“வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.