இலங்கையிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது! லெப்டினன் ஜெனரல் இசுரு சூரிய பண்டார

Report Print Sindhu Madavy in சமூகம்

ஐ.ஸ் ஐ.ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி வழங்கி குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பியோட முடியாது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதற்காக பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லை.

இதேவேளை, மணல் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers