முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய தமிழக பிரபலம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சங்கிலி மன்னனின் 400ஆவது ஆண்டு விழாக்குழு விடுத்த அழைப்பிற்கமைய நேற்றைய தினம் வருகைத்தந்த குறித்த குழுவினர் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களை பார்வையிட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான அருண், தீட்சாக் கௌசிக், தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழுபேர் இவ்வாறு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.