கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் அடையாளந்தெரியாதோர் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, செல்வா நகர் பகுதியில் சற்று முன்னர் அடையாளந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலினால் கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் முகமூடி அணிந்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த 9 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.