அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை ஏதிலிகள் நாடு கடத்தப்பட்டனர்

Report Print Kamel Kamel in சமூகம்
166Shares

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை ஏதிலிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் வழியில் கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கை ஏதிலிகள் பயணம் செய்த படகு அந்த நாட்டு அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பரப்பில் வைத்து இந்த படகு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

படகில் பயணித்த இலங்கை ஏதிலிகள் கிறிஸ்மஸ் தீவுகளில் சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும், பின் நேற்றைய தினம் விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின் இந்த படகு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் கடந்த 2013ஆம் ஆண்டின் பின் படகு மூலம் இலங்கையிலிருந்து சென்ற 186 ஏதிலி கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிலிருந்து எவரும் சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முடியாது எனவும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு இலங்கை ஏதிலிகள் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.