வெடிபொருட்கள் அடங்கிய பொதி சிறப்பு அதிரடி படையினரால் மீட்பு

Report Print Vethu Vethu in சமூகம்

மொனராகலையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.

தனமல்வில - சுரியஆர - குமாரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பொதியில் பல்வேறு வகையான வெடிபொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதியில் ஒரு மின்சார டெடனேட்டர்கள், 195 கிராம் நிறையுடைய சைக்கிள் போல்ஸ் பார்சல், டீ 56 ரக துப்பாக்கிக்கான 5 ரவைகள், 50 கிராம் வெடி மருந்து, 215 கிராம் எமோனியா நைட்ரைட், 10 தீப்பெட்டிகள், வயர் உட்பட மேலும் பல பொருட்கள் காணப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.