கிளிநொச்சியில் வாள்வெட்டு சம்பவம்: ஐந்து சந்தேகநபர்கள் கைது

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - செல்வா நகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் நேற்றிரவு இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இதன்போது வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வாள்கள், கூரிய ஆயுதங்களும் சில, கெப் ரக வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வரும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.