நாளைய தினம் கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது நாளை இடம்பெற உள்ளதாக பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

கிண்ணியா ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நாளை காலை 9 மணிக்கு பிரதேச செயலக மண்டபத்திலும், மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நாளை மாலை 2 மணிக்கு மூதூர் பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெற உள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத் தலைவர்களின் தலைமையில் மேற்படி கூட்டங்கள் இடம்பெற உள்ளன.

இதன்போது பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான மதிப்பீடு, திட்ட நடவடிக்கைகள், எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும், பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.