ஈஸ்டர் தின குண்டுதாக்குதல்! தகவல் வழங்கியதால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் ஞானசாரர்

Report Print Jeslin Jeslin in சமூகம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் கலீல் மௌலவி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறிய சகலரையும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளது.

மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானி ரவி செனவிரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர ஆகியோருக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் அது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட விசேட குழு நேற்றைய தினம் கூடியது.

இதன்போதே மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.