மருத்துவர் ஷாபியின் வீட்டை சோதனையிட்ட பாதுகாப்பு தரப்பினர்

Report Print Steephen Steephen in சமூகம்

மகபேற்று அறுவை சிகிச்சையின் போது பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தார் என குற்றம் சுமத்தப்படும் மருத்துவர் சேய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபியின் வீட்டை பாதுகாப்பு தரப்பினர் சோதனையிட்டுள்ளனர்.

அனுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் உள்ள அவரது ஆரம்ப கால வீட்டையே பாதுகாப்பு தரப்பினர் சோதனையிட்டுள்ளனர். எனினும் சந்தேகத்திற்குரிய எதுவும் அந்த வீட்டில் இருக்கவில்லை.

மருத்துவர் ஷாபியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை இந்த மருத்துவருக்கு எதிராக குருணாகல் போதனா வைத்தியசாலை , தம்புள்ளை வைத்தியசாலை மற்றும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நேற்று வரை 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனிடையே, சில பெண்கள் பேராதனை வைத்தியசாலையுடன் தொடர்புக்கொண்டு மருத்துவர் ஷாபி பற்றி விசாரித்துள்ளனர்.

மொஹமட் ஷாபி என்ற பெயரில் பேராதனை வைத்தியசாலையில் இரண்டு மருத்துவர்கள் கடமையாற்றி வருவதாக கூறப்படுகிறது.