வாழைச்சேனை பொலிசாாினால் ரி-56 ரக துப்பாக்கி மீட்ப்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் செம்மன் ஓடை பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதற்கு பயன்படுத்திய மெகசீன் மற்றும் ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டபோது பிளாஸ்ரிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேசத்தில் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.