மன்னார் நீதவான் ரி.சரவணராஜா கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு திடீர் இடமாற்றம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வரும் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடமாற்றத்திற்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.