கருணாவின் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் அரசியல் அமைப்பாளர் வெளியேற்றம்

Report Print Theesan in சமூகம்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் அமைப்பாளர் அரவிந்தன், அந்த பதவியிலிருந்து இன்று வெளியேறியுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எம் தமிழ் இனம் எனக்கு தந்த விருது துரோகி. இருந்தும் நான் எம் இனம் அறியாமை புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழம் பிடித்து வெற்றி வாகை சூடி களைத்துபோன வெட்டி வீரம் பேசும் ஒரு கூட்டத்தின் வதந்தியால் சில நல்ல மனிதர் கூட புரியாமை, தம் பதிவுகள் போட்டமை, தாம் எதற்காக வெளிநாட்டில் அடைக்களம் தேடி ஓடினர் என்று புரியாமல் பிற நாட்டவர்களுக்கும் வதந்தியைப் பரப்பிய எம் இனத்தின் ஒரு சிலரால் எனக்கு முக நூலில் வரும் பதிவுகளையும் பொருட்படுத்தாமல் அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர் தான் இப்படியானவர் என்று எண்ணி எதையும் செவி மடுக்காது என் சொந்த உழைப்பில் என் பணியை தொடர்ந்தும் ஆற்றி வந்தேன்.

ஆனால் எம் மக்களின் நன்றி கெட்ட தன்மைகளால் என் அரசியல் பணியில் இருந்து விலக இன்றுடன் விலகுகின்றேன்.

கருணா அம்மானின் சர்வதே மற்றும் வடமாகாண அமைப்பாளராக அரவிந்தன் ஆகிய என்னை நியமித்தமை நான் கட்சி தாண்டி தமிழ் மக்களுக்கு எண்ணற்ற பணிகளைச் செய்துள்ளேன்.

என்னால் பயன் அடைந்த அனைவருக்கும் எனது அருமை தெரியும். வடக்கில் பல அரசியல்வாதிகளின் முகத்திரையினை கிழித்து உண்மையினை உலகறியச் செய்தேன் என்பதில் மாற்று கருத்து இல்லை .

ஆனால் என் சமூகமோ என்னை தேவைகளுக்கும் தங்களால் முடியாததை மட்டும் என்னில் தங்களின் விருப்புகளை வெளிப்படுத்தி பின் முதுகில் குத்தியதை பல முறை நான் அனுபவித்தேன்.

இதுவரை உழைத்த என் பணத்தை கொண்டு பலவழிகளில் இனம் மதம் ,மொழி கடந்து சேவை செய்துள்ளேன். ஏழைகளின் கண்ணீரையும் இளைஞர்களின் ஏக்கத்திலும் என் உழைப்பு கலந்து சேவை தொடர்ந்தேன்.

ஆனால் நானும் எத்தனை தடைகளைத்தாண்டி வந்தாலும் வெளிநாட்டிலும், ஒரு சில எம் இன துரோகிகளும் என் முதுகில் ஏறிப் பயணம் செய்வதை இனியும் ஒருபோதும் ஏற்க முடியாது . அவர்கள் நல்லவர்கள் என்பதை உலகிற்கு காட்டி எம் இனத்தை அடிமை ஆக்கினார்.

என்னை கெட்டவனாக்கி அவர்கள் குளிர்காய்ந்து நான் எடுக்க ஒவ்வொரு முயற்சிக்கும் என் இனம் மக்களில் ஒரு சிலர் பெரும் தடையாக இருந்து தமிழரின் அரசியல் விழுமியங்களை மழுங்கடிக்கச் செய்து என் இனம் இறுதிவரை சாதி,மதம், இனம் ,வடக்கு ,கிழக்கு என்று பல பிரிவுகளால் பிரித்து ஒற்றுமை என்பது எட்டாக் கனியாக மாற்ற முயல்கின்ற போது எனக்கு மட்டும் ஏன் தமிழ் பற்று ஏக்கம் வரவேண்டும்?

அப்படி இருந்தும் என்னால் சில விடயங்களை நான் புரிந்து கொண்டேன். நான் எப்படி நன்மை செய்தாலும் புண்ணிய இல்லை என்று உணர்ந்தமையால் நன்றி கெட்ட கூட்டத்தில் நானும் ஒருவனாக வாழ்வதை விட என் குடும்பம் என் தொழில் என்று மட்டுமே, சுயநலத்துடன் வாழ விரும்பி இத்துடன் என் அரசியல் சாசனத்தை முடித்துக் கொள்கின்றேன்.

இனிமேல் யாரும் எங்கும் என்னிடம் அரசியல் மற்றும் தமிழர் நலன் பற்றி கேட்க வேண்டாம்.

நான் நல்ல அரசியல்வாதியாக வரவேண்டும் என்று எண்ணி இதுவரை என் கூட பயணித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி அரசியல் பணியில் இருந்து விலகிவிடுகின்றேன் என கூறி விடை பெறுகின்றேன்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.