வவுனியாவில் தெளஹீத் ஜமாத் பள்ளிவாசலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கற்கை நெறிகள்

Report Print Theesan in சமூகம்

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறன்று ஐ.ஸ் ஐ.ஸ் மற்றும் தெளஹீத் ஜமாத் அமைப்பினர் நடாத்திய பயங்கரவாத தாக்குதலில் 300ற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பை இலங்கை அரசு தடை செய்திருந்தது.

எனினும் வவுனியா 5ம் ஒழுங்கை பட்டானிச்சூர் பகுதியில் வவுனியா தெளஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசல் ஒன்று தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் அத்துடன் சிறார்களுக்கு கற்றல் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட முஸ்லிம் கலாசார சமூக மேம்பாட்டு திணைக்கள உத்தியோகத்தரிடமும் வினவியபோது குறித்த பள்ளிவாசலுக்கு எதுவிதமான பதிவுகளும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தெளஹீத் ஜமாத் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட நிலையில் இவர்களை பொலிஸார் ஏன் தடை செய்யவில்லை என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் இஸ்லாமியர்களால் கெக்கிராவையில் தெளஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளி ஒன்று உடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.