சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - பொகவந்தலாவ மாவெளி வன பகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சட்டவிரோத மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட மூன்று சந்தேக நபர்களுக்கும் இன்றைய தினம் பொகவந்தலாவ பொலிஸாரினால் பிணையில் விடுவிக்கபட்டுள்ளதோடு எதிர்வரும் 04ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொகவந்தலாவ பொலிஸாரினால் கட்டளை பிறப்பிக்கபட்டுளள்து

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.