சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

Report Print Kumar in சமூகம்

அம்பாறை - பொத்துவில் பகுதியில் அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்களம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது கஞ்சா மற்றும் ஹெரோயின் வைத்திருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை மதுவரித்திணைக்கள அதிகாரிகளும், அம்பாறை மதுவரித்திணைக்களமும் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மூன்று பேரிடம் இருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் ஏனைய நால்வரிடம் இருந்து கேரளா கஞ்சா பொதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.