வவுனியா பெரிய பள்ளிவாசலில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது சர்வமதத்தலைவர்களின் ஆசியுரை மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல் , நோன்பு திறத்தல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், தமிழ் சிங்கள முஸ்ஸிம் பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வ மதத்தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான இப்தார் பெருநாளில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.