முத்துஐயன்கட்டு பகுதியில் விபத்து! ஏழு பேர் வைத்தியசாலையில்

Report Print Sujitha Sri in சமூகம்

முல்லைத்தீவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் வைத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers