தென்னிலங்கையை பெரும் சோகத்தில் ஆழ்த்திய துயரச் சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாத மனைவி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் வசிக்கும் 76 வயதான 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதார்.

தனது கணவன் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத அவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 81 வயதான சிறிசேன என்பவரே முதலில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி உயிரிழந்துள்ளார்.

சிறிசேன தொழிற்சாலை ஒன்றில் தொழில் செய்து வந்தவர். உயிரிழந்த கணவனது சடலத்தை வைத்தியசாலையில் இருந்து எடுக்கச் செல்லும் போது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது.

குறித்த தம்பதி திருமணம் செய்து 60 ஆண்டுகள் மிகவும் அன்பாக ஒன்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பாசமான தம்பதியரின் இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.