கொழும்பிலுள்ள இரு பிரபல பாடசாலைகளில் பொலிஸார் திடீர் சோதனை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பிலுள்ள இரு பிரதான பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செயற்படும் விசேட பொலிஸ் அலுவலகத்திற்கு இரண்டு பாடசாலைகள் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்ததாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மதிலின் சில இடங்களில் உடைந்துள்ளமை தொடர்பில் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குருந்துவத்தை பிரதேசத்திலுள்ள பாடசாலை தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக கிடைத்த தகவல்களில் ஏற்பட்ட தடங்கள்கள் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இரண்டு பாடசாலைகளிலும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அங்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers