வவுனியாவில் குடியமர்த்தப்பட்ட 77 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

Report Print Theesan in சமூகம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா - பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் 77 அகதிகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தான் அகதிகள் 45 பேர், ஆப்கானிஸ்தான் அகதிகள் 32 பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக குறித்த அகதிகள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 77 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest Offers