ரிசாத், ஹிஸ்புல்லா, அசாத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, மற்றும் அசாத் சாலியை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் குறித்த மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரக் காலக்கெடுவை கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் வழங்கியிருந்தார். இந்தநிலையிலேயே, அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

Latest Offers