1200மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நகரப்பகுதியில் 1200மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கலால் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஹட்டன் நகரில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers