வவுனியாவில் மரக்கடத்தலை முறியடித்துள்ள பொலிஸார்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மரக்காரம்பளையில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் தாண்டிக்குளம், மரக்காரம்பளை வீதியில் ஓமந்தைப்பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க முதிரைக் குற்றிகள் 11 பட்டா ரக வாகனத்தில் எடுத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்த பொலிஸார் வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாகச் செலுத்தியுள்ளார்.

வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் வழிமறித்தபோது வாகனத்தை கைவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

வாகனத்தின் உதவியாளர்கள் இருவருடன் முதிரைக் குற்றிகளைக் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் தப்பிச் சென்ற வாகனச் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers