கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்ற வான் விபத்தில் மற்றுமொருவர் உயிரிழப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, நொச்சியாகமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வானொன்று நொச்சியாகம பகுதியில் வைத்து கடந்த 26ஆம் திகதி விபத்திற்குள்ளாகியது.

இதன்போது தவசிகுளத்தினை சேர்ந்த 23 வயதுடைய விஜயகுமார் தனுசன் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவரான 32 வயதுடைய பெரியசாமி முகுந்தன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் என தெரிய வந்துள்ளது.

Latest Offers